1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 33,059 COVID19 positive cases reported in Tamil Nadu today

தமிழகத்தில் இன்றும் 33 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு!

தமிழகம்
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 33,059 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 33,059 பேர்களில் 6,016 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 364 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 18,869 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 21,362 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 153,342 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 249,28,606 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் குறையாத கொரோனா மகாராஷ்டிரா குறைவது எப்படி?