திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (17:30 IST)

கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் நடிகை சுனைனா!

கொரோனா தொற்றினால் நடிகர், நடிகைகள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டாம் அலை உலகம் முழுக்க உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் பலர் இறந்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நடிகை சுனைனா சிகிச்சை பெற்று வீடு திரும்பி புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு “மருத்துவர்கள் ஆலோசனைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருந்து தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளேன். 
 
எனக்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். மருத்துவர்களின் முழு ஆலோசனைகளையும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி எம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி  பாதுகாப்பாக இருப்போம் என பதிவிட்டுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunainaa (@thesunainaa)