கேரளாவில் 3,402, கர்நாடகாவில் 9540 பேர்: இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு

corona
கேரளாவில் 3,402, கர்நாடகாவில் 9540 பேர்
siva| Last Updated: புதன், 9 செப்டம்பர் 2020 (20:53 IST)
கேரளாவில் இன்று கொரோனா தொற்றால் 3,402
பேர் பாதிப்பு அடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவில் இருந்து 70921 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், கேரளாவில் கொரோனா பாதிப்புடன் 24,549 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தின் இன்னொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 9540 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். கர்நாடகாவில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 128 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,21,730 ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது
கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து 3,15,433 பேர் குணம் அடைந்துள்ளனர் என்பதும், கர்நாடகாவில் கொரோனா பாதிப்புடன்
99,470 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :