புற்றுநோய் சிகிச்சைக்கு இடையிலும் படப்பிடிப்பில் கலந்துகொண்டாரா சஞ்சய் தத்?

Last Modified புதன், 9 செப்டம்பர் 2020 (17:00 IST)

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் இப்போது ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் வரிசையாக படங்களை நடித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கே ஜி எப் படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோன ரேபிட் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் ஒருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீண்டும் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது மும்பை திரும்பியுள்ள சஞ்சய் தத் ஷிம்ஷேரா என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :