1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

தொடர்ந்து 9 ஆயிரமாக நீடிக்கும் பாதிப்புகள்; 36 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

India Corona Cases
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் மீண்டும் மெல்ல குறைந்து வருகிறது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 9,531 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,43,48,960 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,27,368 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,37,23,944 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 97,648 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பசுவுக்காக 5 பேரை அடித்தே கொன்றோம்..! – பகிரங்கமாக பேசிய பாஜக Ex-எம்.எல்.ஏ!