16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? இன்று அறிவிக்கின்றார் முதல்வர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் கடுமையான எதிர்ப்பு காரணமாக தேதி மாற்றப்படலாம் என்றும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க படலாம் என்றும் கூறப்பட்டது
அதுமட்டுமின்றி பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையும், டிசம்பர் மாதத்திற்கு பின்னர் பள்ளிகள் திறந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்திய நிலையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்கும் அறிவிப்பு எப்படி இருக்கும் என்பதை அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது