வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (18:48 IST)

திமுக தேர்தல் அறிக்கை குறித்து கவலை இல்லை.. மேகதாது அணையை கட்டியே தீருவோம்: டிகே சிவகுமார்

TK Sivakumar
திமுக தேர்தல் அறிக்கை குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும் மேகதாது அணையை கட்டுவதற்காகத்தான் நான் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறேன் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
நேற்று வெளியான திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயம் என்ற தலைப்பில் மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பெங்களூரில் பேட்டி அளித்த கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார்  மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என திமுக கூறுவது அவரது கொள்கை முடிவு என்றும் ஆனால் கர்நாடக நீர் பாசன துறை அமைச்சராக நான் இருப்பதே மேகதாது அணையை கட்டுவதற்காக தான் என்றும் எங்கள் பக்கம் நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார் 
 
பெங்களூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அனைத்து நீதிமன்றங்களிலும் நாங்கள் முறையிடுவோம் என்றும் எங்களுக்கு கண்டிப்பாக நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணியாக இருக்கும் நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran