செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (15:48 IST)

முதல்வருக்கு நன்றி கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்

மக்களவை தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலினுக்கு  அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் திமுக சார்பில்   21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டு மக்களின் இலட்சியங்களை ஒட்டுமொத்த இந்தியாவிலும் செயல்படுத்துவதற்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
"மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
 
ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
 
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
 
புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
 
இந்திய ஒன்றியம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.
 
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்படும்.
 
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றம்.
 
மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.
 
பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும், சிலிண்டர் ரூ.500-க்கும் வழங்கப்படும்"
 
போன்ற பல்வேறு அறிவிப்புகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டு மக்களின் இலட்சியங்களை ஒட்டுமொத்த இந்தியாவிலும் செயல்படுத்துவதற்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின்   அவர்களுக்கு நன்றிகள்''என்று தெரிவித்துள்ளார்.