திருவண்ணாமலை ATM கொள்ளை: கர்நாடகாவில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் கைது..!
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட இரண்டு கொள்ளையர்கள் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் இரண்டு கொள்ளையர்கள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து தனிப்படை கர்நாடகா சென்று பதுங்கி இருந்த பாஷா மற்றும் உசேன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்படுவதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் இருந்து அரியானாவுக்கு தப்பிச்செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில் தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran