ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:06 IST)

திருமலை கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு.. கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

tirupathi
கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் நான்கு மாட வீதிகளில் தேர் வலம் வந்தது என்பதையும் பார்த்தோம். 
 
பிரம்மோற்சவத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்தனர் என்பதும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவடைகிறது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
பிரமோற்சவம் முடிவடைந்ததை அடுத்து கோவில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருமலையில் திருக்குளத்தை சுற்றியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
 
தீர்த்தவாரிக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva