திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (11:41 IST)

திருப்பதி மலைப்பாதையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை!? - என்ன காரணம்?

tirupathi

திருப்பதிக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்லும் நிலையில் மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்கள் பலர் மலைப்பாதை படிக்கட்டுகள் வழியாக நடந்து வருகின்றனர். படிகளில் ஏற விரும்பாத பயணிகள் மலைச்சாலை வழியாக வாகனங்களில் பயணித்து செல்கின்றனர்.

 

இந்நிலையில் திருப்பதிக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் வரும் செப்டம்பர் மாதம் வரை இரவு நேரங்களில் இருச்சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.

 

தற்போது வன மிருகங்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இரவு நேரங்களில் வன விலங்குகள் அதிக அளவில் சாலைகளில் நடமாடுவதாகவும், அதனால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K