தொடர்புடைய செய்திகள்
- திருப்பதி மலைப்பாதையில் சிறுமியின் சடலம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!
- 7 மாதங்களில் ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா... வெளியான தகவல்
- ''திருமணம் செய்வதால் சுதந்திரம் இழக்கிறோம் '' -அஜித் பட நடிகை ஓபன் டாக்
- நாளை புறப்படும் சந்திரயான் 3! திருப்பதியில் விஞ்ஞானிகள் வேண்டுதல்!
- இலங்கையில் திருப்பதி கோவில்.. முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ஆளுனர்..!
மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கு அனுமதி இல்லை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கான அனுமதி இல்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் சென்ற சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். அதன் பிறகு அவர் சிறுத்தை தாக்கி பலியானார் என்பதும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலை பாதையில் செல்ல சிறுவர் சிறுமிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது
அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே செல்ல அனுமதி என்றும் அறிவித்துள்ளது. மேற்கண்ட விதிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
Edited by Mahendran
