1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:18 IST)

வாஜ்பாய் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு பின் மன்னிப்பு கேட்ட திரிபுரா ஆளுனர்

திரிபுரா ஆளுனர் தத்தகட்டா ராய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் இறந்துவிட்டதாக தவறான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமானதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்
 
வாஜ்பாயின் உடல்நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை  மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை  தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளது. 
இதன் எதிரொலியாக, ஆகஸ்ட் 18, 19 நடக்கவிருந்த பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திரிபுரா ஆளுனர் தத்தகட்டா ராய், வாஜ்பாய் இறந்துவிட்டதாக தவறான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார். இந்த தகவல் வேகமாக பரவியது.
பின் சற்று நேரத்தில் தனது டிவீட்டை டெலீட் செய்த ஆளுனர், ஒரு சேனலில் தவறாக செய்தி வெளியிடப்பட்டதைப் பார்த்து, டிவீட் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியிருக்கிறார்.