செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 3 மே 2020 (08:38 IST)

1800 கிலோ மீட்டர் பயணம் செய்து தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வந்த ரிஷிகபூரின் மகள்

1800 கிலோ மீட்டர் பயணம் செய்த ரிஷிகபூரின் மகள்
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார் என்பது தெரிந்ததே. அவரது மறைவால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ஏற்கனவே இர்பான்கான் மறைவால் துயரத்தில் இருந்த பாலிவுட் ரசிகர்களின் ரிஷிகபூர் மறைவால் மேலும் துயரம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரிஷிகபூரின் மகள் டெல்லியில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி உள்ள நிலையில் அவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்தவித போக்குவரத்து இல்லாததால் அவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விமானத்தில் செல்ல அனுமதி கேட்டார் 
 
ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு விமானத்தில் செல்லும் வசதியை செய்து கொடுக்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து சாலை வழியாக செல்ல மட்டுமே அவருக்கு அனுமதி கிடைத்தது. இதனை அடுத்து ரிஷ்கபூர் மகளும் அவருடைய உறவினர்கள் ஐந்து பேர்களும் இரண்டு கார்களில் டெல்லியில் இருந்து மும்பைக்கு பயணம் செய்தனர் 
 
சுமார் 1800 கிலோமீட்டர் பயணம் செய்த அவர்கள் இன்று அதிகாலை மும்பை அடைந்ததாகவும் இதனை அடுத்து ரிஷிகபூரின் இறுதி சடங்கு இன்று மாலை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 1800 கிலோ மீட்டர் காரிலேயே பயணம் செய்த ரிஷிகபூரின் மகள் குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது