மோடி திறந்து வைத்த சுரங்கப்பாதையில் ஒரே நாளில் 3 விபத்துக்கள்: அதிர்ச்சி தகவல்
மோடி திறந்து வைத்த சுரங்கப்பாதையில் ஒரே நாளில் 3 விபத்துக்கள்
கடந்த மூன்றாம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகின் மிக நீளமான அடல் சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி என்ற பகுதியிலிருந்து லே என்ற பகுதியை இணைக்கும் இந்த சுரங்க நெடுஞ்சாலை பாதையில் ஒரே நாளில் 3 விபத்துக்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து சுரங்கப் பாதையின் தலைமை பொறியாளர் புருஷோத்தமன் அவர்கள் கூறியபோது சுரங்கப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பொறுப்பின்மை காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்
சுரங்கப் பாதையின் இடையில் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்துக் கொண்டிருப்பது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்கள் செல்வதும், வாகனங்கள் முந்துவதற்கு சுரங்கப்பாதைகள் அனுமதி இல்லை என்ற நிலையில் ஒரு சில வாகனங்கள் முந்திச் செல்ல முயன்றதாகவும் இதனால் தான் இந்த விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் அவர் வைத்துள்ளார்
மேலும் சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்துக் கொண்டு இருப்பது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளதாகவும் கூறப்படுகிறது