செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (10:49 IST)

உலகிலேயே மிக நீளமான சுரங்கபாதை! – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இமாச்சல பிரதேசத்தில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கபாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இமாச்சல பிரதேசத்தின் ரொஹ்டாங் பகுதியில் மணாலி தொடங்கி லே பகுதியில் முடியும் விதமாக 46 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய சுரங்கபாதையை அமைக்கும் பணிகள் நிறவடைந்தன. இந்த சுரங்கப்பாதைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக அடல் சுரங்கபாதை என பெயரிடப்பட்டுள்ளது.

பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கொண்ட இந்த சுரங்கபாதையை இன்று பிரதமர் திறந்து வைத்தார். இந்த சுரங்கபாதையால் ரொஹ்டாங் மக்களின் போக்குவரத்து எளிமையாவதால் வேலைவாய்ப்புகள் போன்றவற்றிற்காக எளிதாக மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். மேலும் உலகின் மிக நீளமான சுரங்கபாதை என்பதால் சுற்றுலா அதிகரிப்பதால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என கூறப்படுகிறது.