வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (17:30 IST)

பிரதமர் மோடியை ஓவர் டேக் செய்த ராகுல்காந்தி...ஃபேஸ்புக்கில் அதிகப் பார்வையாளர்கள் !

பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தைவிட  ராகுல்காந்தியின் ஃபேஸ்புக் பக்கத்தை சுமார் 40%  பார்த்துள்ளனர்.

இந்திய நாட்டின் பிரதமர் மோடிக்கு ஃபேஸ்புக்கில் 4.9 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர்.

ராகுல்காந்தியை 3.5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைப் பார்க்க சென்ற எம்பி ராகுல்காந்தியைச் செல்லவிடாமல் போலிஸார் தடுத்தனர் இந்தத் தள்ளுமுள்ளில் அவர் கிழே விழுந்து காயம் ஏற்பட்டது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது இந்நிலையில் கடந்த செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 ஆம் தேதிவரை பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தைவிட ராகுல்காந்தியின் ஃபேஸ்புக் பக்கத்தை சுமார் 4) % அதிக பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.