இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட் - நிர்மலா சீதாராமன்!
2023-24 பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட் என்று நிர்மலா சீதாராமன் பெருமிதமாக பேசியுள்ளார்.
2023 - 24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இந்திய பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்து தனது உரையை ஆரம்பித்தார்.
அதன்படி 9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்தான் இந்த பட்ஜெட் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.