வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 18 அக்டோபர் 2023 (08:06 IST)

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரி திடீர் மாற்றம்..! என்ன காரணம்?

tirupathi
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் திடீரென மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தின் பெயரில் சிறு மாற்றம் செய்து பல போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அதன் மூலம் பண மோசடி செய்யப்பட்டு வருவதாகவும் பல புகார்கள் எழுந்தது.

அதன் அடிப்படையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மாற்றி உள்ளது.  மோசடியை தடுப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர் முகமறியை https://ttdevasthanams.ap.gov.in என மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது.

இனிமேல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்பு தொடர்பு கொள்ளும் பக்தர்கள் மேற்கண்ட இணையதள முகவரியை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த புதிய இணையதளத்திற்கு போலி இணையதளங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் எடுத்து வருகின்றனர்

Edited by Siva