திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (07:51 IST)

’லியோ’ ரிலீஸ் எதிரொலி.. திருப்பதி சென்று பிரார்த்தனை செய்த லோகேஷ் கனகராஜ்..!

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழுவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.  
 
விஜய், த்ரிஷா நடிப்பில் உருவான ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான ரிலீஸ் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்ளிட்ட தனது இயக்குனர் குழுவுடன் திருப்பதி சென்றுள்ளார். அங்கு அவர் ஏழுமலையான் கோவிலில் ’லியோ’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாகவே திரை உலக பிரபலங்கள் திரைப்பட ரிலீஸ்க்கு முன்னர் திருப்பதி சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva