தொடர்புடைய செய்திகள்
- திரைப்பட பாணியில் ஓடும் வாகனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
- சற்றும் எதிர்பாராத விவசாயிகள் பேரணி; அதிர்த்த மகாராஷ்டிரா
- போலீஸ் வாகனத்தையே அசால்டாக திருடிய திருடர்கள்
- ஒரே மாதத்தில் 4 தற்கொலைகள்: மகாராஷ்டிரா தலைமைச்செயலகத்திற்கு போடப்பட்ட வலை
- 10 ஆயிரம் தமிழக போலீசாரிடம் லைசன்ஸ் கிடையாது? - அதிர்ச்சி செய்தி
அடேய் யாரடா நீ? டிரைவிங் லைசென்ஸை கொரியர் அனுப்பிய திருடன்
திருடன் தான் திருடிச் சென்ற பர்ஸில் இருந்த ஓட்டுநர் உரிமம் அட்டையை அதில் இருந்த முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரபல தொழிலதிபரான ஸ்வப்னா டே கடந்த 17ஆம் தேதி தனது காரை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நிறுத்திவிட்டு வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
நடைபயிற்சி முடித்துவிட்டு திரும்பி வந்த பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த பர்ஸ் திருடி போனது தெரியவந்தது. ஸ்வப்னா உடனடியாக திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடந்த 29ஆம் தேதி அவரது பழைய வீட்டு முகவரிக்கு கொரியர் ஒன்று வந்துள்ளது. அதனை அருகே உள்ள வீட்டில் வசிப்பவர் ஸ்வப்னாவிடம் கொடுத்துள்ளார். அனுப்புநர் முகவரி இல்லாமல் பார்சல் வந்துள்ளது. உள்ளே திருட்டு போன அவரது பர்ஸில் இருந்த ஓட்டுநர் உரிமம் அட்டை இருந்துள்ளது.
இதனால் ஸ்வப்னா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
