வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (20:52 IST)

இளம்பெண் மீது பெட்ரொல் ஊற்றித் தீ வைத்த வாலிபர்

கேரள மாநிலம பத்தினம்திட்டா மாவட்டத்தில்  கல்லூரிக்கு சென்ற மாணவி கவிதா மீது அஜின் ரேஜி என்பவன்  பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். இதானால் அங்கு பரபரபு ஏற்பட்டது.
தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கவிதாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளான் ரேஜி அஜின். இதனை எற்க மறுத்துள்ளார் கவிதா. அவரது வீட்டிலும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் கல்லூரிக்குச் சென்ற கவிதாவை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி இருக்கிறார். கவிதா மறுக்கவே தான் கொண்டு வந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அங்கிருந்த மக்கள் உடனடியாக தீயை அணைத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு கவிதாவை அழைத்துச் சென்றனர். அப்போது மேத்யூவை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
 
தற்போது மேத்யூ மீது 302 பிரிவின் கீழ்  வழக்குப் பதிவு செய்து அவனிடம் விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.