1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (16:17 IST)

பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற இளைஞர்கள்

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒரு சாலையில் தனியாக நின்று கொண்டிருந்தார் பெண்ணை இருவர் இருசக்கர வாகனத்தில் தரத்தரவென இழுத்துப் போகும் காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற சாலையின் ஓரமாய்  ஒரு நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது இருவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.அந்தப் பெண்ணை நெருங்கியதும் அவரது சேலையை பிடித்து சாலையில் தரத்தரவென இழுத்துச் செல்லுகின்றனர். இதை அங்கிருந்தவர்களும் கண்டும் காணாதது போல் இருந்ததுதான் பெரும் வியப்பாக இருந்தது.
 
மனிதநேயமே இல்லாமல் இப்படி கொடூரமாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகின்றன. இந்த சம்பவம் கடந்த 8 ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி காட்சியின் மூலமாய் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.