வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (17:51 IST)

’’வாட்ஸ் அப்பில்’’ பரவும் விபச்சார தொழில் : அழகிகள் பலே பலே

தொழில்நுட்பம் எந்த அளவு வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு பல தொல்லைகள் வளர்க்கிறது. இதற்கு பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் உதாரணம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தால் பலரது வாழ்க்கை சீரழிந்துள்ளது. இந்நிலையில் பல இளைஞர்களை குறிவைத்து திருச்சியில் விபச்சாரம் நடைபெற்று வருகிறது. இதற்கு வாட்ஸ் அப்பை தங்கள் அழைபுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு நேரடியாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விபச்சார அழகிகளாக வெளிமாநிலத்தவர்கள் இருப்பதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரமான திருச்சியில் பலகட்டமாக விபச்சாரம் நடப்பதாக தெரியவந்துள்ளது,  தமிழகத்தில் விபச்சார தடுப்பு காவல் பிரிவு செயல்படுகிறது.  ஆனாலும் அதையும் மீறி இவ்வாறு வாட்ஸ் அப் ,மூலமாய் தொடர்பு கொண்டு உரிய இடத்தில் வைத்து சந்திக்கும் விபச்சாரம் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
திருச்சியி முக்கியமாக கேகே நகரில் சொகுசு வீடுகளை வாடகைக்கு எடுத்து இத்தொழில் நடந்து வருவதாக தெரிகிறது. இதில் அழகிகளுக்கு தாமரை முல்லை என்ற மலர்களின் பெயரை வைத்துள்ளனர். குறிப்பிட்டவர்களுக்கு 1,2 என்ற எண்களும், வைத்துள்ளனர். வாடிக்கையாளர்கல் எந்த எண்ணைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதே எண்ணுள்ள அழகிகள் சரியாக சொன்ன நேரத்திற்கு வந்து எல்லாம் முடித்துவிட்டு செல்கிறார்கள். 
 
மேலும் உறையூர் பகுதியிலும் ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதாக புகார் வந்திருக்கின்றன இதனால் அக்கம் பக்கத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.