திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:35 IST)

மனைவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர்! அடித்து துவைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி...

மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் மாவட்டத்தில் நிகில் நிர்மல் கலெக்டராக இருக்கிறார். இவருக்கு நந்தினி கிருஷ்ணன் என்ற மனைவி இருக்கிறார். நந்தினிக்கு ஒரு இளைஞர் தொடர்ந்து பலமுறை ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து நிர்மல் அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர்  போலீஸார் பினோத் சர்கார் என்ற இளைஞரை ஞாயிற்றுக் கிழமை கைது செய்ததுள்ளனர்.
 
இது பற்றி  அறிந்த ஐஏஎஸ் அதிகாரி காவல்நிலையத்துக்கு தன் மனைவியுடன் வந்து அங்கிருந்த இளைஞரை பலமாக தாக்கினார். 
 
இதை யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டதால், ஐஏஎஸ் அதிகாரி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் தன் கணவர், இளைஞரை தாக்கியது குறித்து ’நிகில் ரியல் ஹீரோ’ என நந்தினி பேஸ்புக்கில் பதிவிட்டார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.