1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (13:20 IST)

மணிரத்தனம் படத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்குமார்...

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ்குமார். இவர் ஏ. ஆர் ரஹ்மானின் அக்கா மகன் ஆவார்.
இசையமைப்பாளராக தன் கேரியரை தொடங்கியவர் தற்போது முன்னனி நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
 
இந்நிலையில் மணிரத்னம் தன் கனவு படமான பொன்னியின் செல்வன்  படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் இருப்பதாக  செய்திகள் வெளியாகின்றன.
இப்படத்தை தனசேகரன் தயாரிக்கிறார். 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது மணிரத்னம் இப்படத்திற்கான வசனம் எழுதி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மணிரத்தன் இயக்கத்தில் அடுத்தொரு கிளாசிக் படத்தை எதிர்பார்க்கலாம்.