’உலகின் மிக பெரிய சிலைக்குள் ’ மழைநீர் கசிவு : பரவலாகும் வீடியோ
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே மிகப்பெரிய சிலையை(ஒற்றுனையின் சிலை ) பாரத பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த பெருமை மிக்க சிலை குஜராத் மாநிலத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகாமையில் உள்ளது. இந்த சிலையைக் கட்டமைக்க ரூ.3ஆயிரம் கோடி ருபார் செலவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ளமிக முக்கியமான சுற்றுலாத் தளமாகவும் இது இருந்து வருகிறது.
வடமாநிலங்களில் மனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த சிலை அமைந்துள்ள வளாகத்திலும் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த சிலை வளாகத்தில் மழை நீர் கசிவு ஏற்பட்டதை ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ பரவலாகிவருகிறது,
இந்நிலையில் இந்த மழை நீர் கசிவு குறித்து, அங்குள்ள சிலை வளாகப் பராமரிப்பு அதிகாரிகள் , மழையின் போது வீசிய பலத்த்த காற்றினால் மழை நீர் உள்ளே வந்திருக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தனர்.