செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (23:12 IST)

வங்கியில் பணம் எடுக்க சென்ற பெண்…கண்ணாடி கதவில் மோதி பலி!

கேரள மாநிலத்தில்  வங்கிக்கு பணம் எடுக்கச் சென்ற பெண் அங்குள்ள நுழைவாயில் இருந்த கண்ணாடி கதவைத் திறக்காமல் அதன் மீது வந்து மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.

கேரள மாநிலம் சேர நல்லூரில் வசித்து வந்தவர் பீனா (46).இவர் நேற்று மதியவேளை பெரும்பலூரில் உள்ள ஒரு வக்கிக்குச் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்ததும் வீட்டிற்குச் செல்ல புறப்பட்டார். அப்போது, வங்கிலேயே வாகனச் சாவியை மறந்துவிட்டதால் மீண்டும் வங்கிக்குச் சென்று சாவியை எடுத்துவிட்டு வேகமாக வெளியே வர முயன்றவர்,. நுழைவாயில் கண்ணாடியைப் பார்க்கவிலை;  அந்தக் கண்ணாடியில் மோதிய வேகத்தில் உடைந்து பீனாவில் வயிற்றில் குத்தியது. உடனே மருத்துவ ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.