இளம்பெண்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நம்பி ஏமாறக்கூடாது- ராதிகா சரத்குமார்
பிக்பாஸ் நிகழ்ச்சியை நம்பி இளம் பெண்கள் ஏமாற கூடாது என்று நடிகை ராதிகா சரத்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின் அந்த நிகழ்ச்சி சமூக சீர்கேடுகளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வேல்முருகன் உள்பட ஒரு சில அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா நீரிழிவு நோய் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் அதில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருப்பது தான் பெரும்பாலும் நடக்கிறது என்று இதுபோன்ற நிகழ்ச்சியை நம்பி இளம் பெண்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் யாரையும் நம்பி கைபேசியில் பேசி காதலில் மூழ்கி ஏமாறாதீர்கள் என்றும் இளம்பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran