1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (15:50 IST)

உயர்தர உணவகங்களில் குடிநீர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுகொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி

உணவகங்களில் தண்ணீர் பாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை(MRP) விட அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
உணவகங்கள், திரையரங்குகள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை(MRP) விட அதிகமாக விற்று வருவதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உணவகங்கள் சங்கத்தின் வைக்கப்பட்ட வாதத்தில், ஆடம்பரமான உணவகங்களில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பதாகவும்,  உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கிருக்கும் ஆடம்பர சூழலையும் சேர்த்து தான் அனுபவிக்கிறார்கள். எனவே அதற்கும் சேர்த்து தான் அவர்களிடம் உணவு வகைகளிலும், தண்ணீர் பாட்டில்களிலும் நிர்ணயித்த விலையை விட அதிகவிலையை வாங்க வேண்டியிருப்பதாக தெரிவித்தனர். 
 
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உணவகங்களில் தண்ணீர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக் கொள்ள அனுமதி அளித்தனர்.