திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (17:26 IST)

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் யார்? பாஜகவின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடைபெற்ற முடிந்த ஐந்து மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 
 
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்காமலே தேர்தலை சந்தித்த பாஜக தற்போது முதலமைச்சர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
 சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியவர் விஷ்ணு தியோ சாய் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த நிலையில், பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய்-ஐ முதல்வராக கட்சித் தலைமை தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva