திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (10:02 IST)

மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது! மீண்டும் உளறிய அமித்ஷா

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 'ஊழல் செய்யும் அரசு எது என்ற போட்டி வைத்தால் அதில் எடியூரப்பாவின் அரசு முதலிடம் பெறும் என்று பாஜக தேசிய தலைவர் உளறியதை எதிர்க்கட்சிகளும், நெட்டிசன்களும் கிண்டல் செய்தனர். அமித்ஷா வாயில் இருந்து தவறுதலாக உண்மை வந்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய அமித்ஷா, 'ஏழைகளுக்கும் ,தலித்துகளுக்கும் சித்தராமையா ஒன்றும் செய்யமாட்டார் என கூறினார். ஆனால் அமித்ஷா பேச்சை கன்னடத்தில் மொழி பெயர்த்த பாஜக எம்பி ஒருவர், 'நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது என மாற்றி மொழி பெயர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்து கொண்டு அவர் சித்தராமையா அரசு என்று கூறினார்.

இந்த முறை அமித்ஷா உளறவில்லை என்றாலும் நெட்டிசன்கள் அவரை குறி வைத்தே மீம்ஸ் கிரியேட் செய்து வருகின்றனர். ஸ்டாலின், அமித்ஷா போன்ற பெரிய தலைவர்களே தங்களது பேச்சில் உளறி கொட்டி வருவது நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.