செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (16:49 IST)

ஊழலில் முதலிடம் பாஜக அரசுக்குத்தான்: ஸ்டாலினுக்கு நிகராக உளறிய அமித்ஷா

ஊழலில் முதலிடம் பாஜக அரசுக்குத்தான்: ஸ்டாலினுக்கு நிகராக உளறிய அமித்ஷா
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் முதலவர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக பாஜக தலைவர் அமித்ஷா வாய்தவறி உளறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாட்காவில் தேர்தல் தேதி மே 12 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளது. இந்த நிலையில் இன்று கர்நாடகாவிற்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்கான தெரிவித்தார். அவ்வாறு அவர் ஆவேசமாக பேசி வந்த போது, 'ஊழல் மலிந்த ஆட்சி எது என்ற போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும்” என்று கூறினார்.

ஊழலில் முதலிடம் பாஜக அரசுக்குத்தான்: ஸ்டாலினுக்கு நிகராக உளறிய அமித்ஷா
அமித்ஷா பேச்சை கேட்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார். உடனே அமித்ஷா அருகில் இருந்த இன்னொரு தலைவர் அவருக்கு தவறை சுட்டுக் காட்டியவுடன் சுதாகரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக காங்கிரஸ் அரசுதான் என்று மாற்றி கூறினார்.

கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் பழமொழிகளை மாற்றி சொல்லி நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி வரும் நிலையில் அதேபோல் பாஜக தலைவரின் இந்த உளறலையும் நெட்டிசன்கள் வச்சு செஞ்சு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது