புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (15:29 IST)

கருப்பா...நீளமா பாம்பா அது ? பெல்ட்டாக இடுப்பில் சொருகிய நபர் .. வைரல் வீடியோ

வயல் வெளியில் சும்மா இருந்த பாம்பை எடுத்து ஒருவர் தனது பேண்ட்டில் பெல்டாக அணிகின்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கி  தலைதெறிக்க ஓடுவர் என்று சொல்லிவார்கள். இந்நிலையில் வயல் ஓரத்தில் மூன்று நபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் வயலுக்குள்  கறுப்பாக ஒன்று இருப்பதை பார்த்து அவர் கையை விட்டு எடுக்க முற்பட... அருகில் நின்ற இருவர் பதற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். ஒருவேளை பெரிய பாம்பாக இருக்குமோ என அதை வீடியோ எடுத்த நபர் நின்றிருக்க.. வயலுக்குள் கையை விட்டவர் அந்த கருப்பு பொருளை எடுத்து தன் பேண்ட் லூப்பில் பெல்ட்டாக அணிந்துகொண்டார். அதைப் பார்த்த நண்பர்கள் அட இவ்ளோதானா என்பது போல் அவரைப் பார்த்தனர்.
 
இந்த வீடியோ வைரலாகிவருகிறது. முக்கியமாக இந்த வீடியோ 3 மில்லியனுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.