1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Japan meets powerful hurricane

60 வருடங்களுக்கு பிறகு ஜப்பானை நாசம் செய்த சூறாவளி! – வைரல் வீடியோ!

World
மிகப்பெரிய சூறாவளி ஒன்று தாக்கியதில் நிலைகுலைந்து போயிருக்கிறது ஜப்பான். சூறாவளி தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

1960ல் ஜப்பானில் மிகப்பெரும் சூறாவளி ஒன்று தாக்கியது. இதனால் பலர் உயிரிழந்தனர். ஜப்பானின் பல பகுதிகள் தரைமட்டமாகின. ஜப்பான் ஒரு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. சுமார் 59 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதே அளவுக்கு மிகப்பெரிய சூறாவளி ஒன்று ஜப்பானை தாக்கியுள்ளது.

ஜப்பானை சூறாவளி வந்தடையும் முன்னரே வானம் முழுவதும் பிங்க் நிறத்தில் மாறிவிட்டிருந்தது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கினார்கள். சற்று நேரத்தில் தனது விஸ்வரூபத்தை காட்டிய சூறாவளி மிகப்பெரும் ட்ரக்குகளை கூட விளையாட்டு பொம்மைகளை போல தூக்கி வீசியது. கட்டிடங்கள், டவர்கள் சரிந்து விழுந்தன.

இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. சூறாவளியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ‘ஜப்பானுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் ! நீட் பயிற்சி மையங்களில் ஐடி சோதனை... பரபரப்பு சம்பவம்