1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (14:54 IST)

’செல்ஃபி’ எடுக்கும் போது விபரீதம்... 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நபர் !

ஆந்திர  மாநிலம் சித்தூர் மாவட்டம் மந்தனபள்ளி என்ற பகுதியில் உள்ள போயகொண்ட கங்கம்மா  என்ற கோயில் உள்ளது. இங்கு ஒரு நபர் தனது செல்போனில் செல்ஃபி எடுக்கும் போது, 30அடி பள்ளத்தாக்கில் விழுந்தார். இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர  மாநிலம் சித்தூர் மாவட்டம் மந்தனபள்ளி என்ற பகுதியில் உள்ள போயகொண்ட கங்கம்மா  என்ற கோயில் உள்ளது. இங்கு ஒரு நபர் தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
 
அப்போது, அருகே இருந்த பள்ளத்தாக்கில் அவர் தவறி விழுந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், பள்ளத்தாக்கில் விழுந்த நபரை உயிருடன் மீட்டனர்.
 
உடலில் சில காயங்கள் மற்றும் ஒருகாலில் முறிவு ஏற்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.