புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:23 IST)

பிறந்த குழந்தையை முட்புதரில் தூக்கி வீசிய கொடூரம் !

ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்து சில மணிநேரங்கள் ஆன குழந்தையை முட்புதரில் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று எத்தனையோ தம்பதிகள் குழந்தைகள் இல்லையே என கவலைப் பட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முட்புதரில் குழந்தையை வீசிச் சென்றுள்ளனர். 
 
பின்னர்,அந்த வழியே சென்ற மக்கள் முட்புதரில் குழந்தையில் அழுகுரல் கேட்கவே சென்று பார்த்து, குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முள் குத்தியதாலும், பிஞ்சு உடலில் அடிபட்டதாலும் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இந்தக் குழந்தையின் பெற்றோர் யார் ?எனவும் இக்குழந்தையை வீசிச் சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.