1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (15:48 IST)

ஒரே மாதத்தில் 5 முறை கடித்த ஒரே பாம்பு.! உயிர் பயத்தில் வாழும் இளைஞர்..!!

Snake
உத்தரபிரதேசத்தில் ஒரே மாதத்தில் ஐந்து முறை பாம்பு கடித்தும், இளைஞர் ஒருவர் உயிருடன் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரபிரதேசம், ஃபதேபூரைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. இவரை ஒரே பாம்பு ஒரு மாதத்தில் 5 முறை கடித்ததாக கூறப்படுகிறது. ஒரு முறை கடித்த பின் அந்த இளைஞர் வெவ்வேறு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் வந்து அதே பாம்பு அவரை கடித்ததாக கூறப்படுகிறது. கடந்த 38 நாட்களில் ஆறு முறை பாம்பு கடித்தும் மருத்துவர்களின் உதவியால் அந்த இளைஞர் உயிருடன் இருக்கிறார்.
 
தனது வீட்டில் பாம்பு கடித்ததால், தனது உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கும் பாம்பு கடித்ததாகவும் விகாஸ் துபே வேதனை தெரிவித்தார். அதுமட்டுமின்றி பாம்பு கடிக்க வருவதை நான் முன்கூட்டியே உணர்வதாகவும், சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் தன்னை பாம்பு கடிப்பதாகவும் விகாஸ் துபே குறிப்பிட்டார்.


இந்நிலையில் இது பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையா என அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.