செவ்வாய், 9 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (09:28 IST)

எரிமலையில் சிக்கிய இளைஞர்கள்! Man vs Wild மூலமாக உயிர் வாழ்ந்த அதிசயம்!

Bear Grylls

இந்தோனேசியாவில் எரிமலையில் சிக்கிய இளைஞர்கள் பியர் க்ரில்ஸ் வீடியோவில் கிடைத்த அறிவின் மூலமாக உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்கவரி சேனலில் Man vs Wild என்ற நிகழ்ச்சியை வழங்கி வருபவர் சாகசக்காரரான பியர் க்ரில்ஸ். பல்வேறு நாடுகளின் காட்டுக்குள் எந்த வித பாதுகாப்பு அம்சமும் இன்றி செல்லும் இவர் அங்குள்ள பொருட்களை கொண்டே கூடாரம் அமைத்து வாழ்வது, அங்குள்ள பூச்சிகள், விலங்குகளை சாப்பிட்டு உயிர் வாழ்வது என பல சாகசங்களை செய்வார். இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
 

இந்நிலையில் சமீபத்தில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் எரிமலையை சுற்றி பார்க்க மேத்யூ (22), ஆண்ட்ரூ (18) என்ற இரு இளைஞர்கள் சென்றுள்ளனர். எரிமலைக்காடு வழியாக சென்றவர்கள் வழி மறந்ததால் காட்டிற்குள்ளேயே சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் பியர் க்ரில்ஸின் வீடியோக்களை பார்ப்பவர்களாக இருந்துள்ளனர். அதனால் அதில் வருவது போல கூடாரம் அமைத்து, மழை நீரை சேகரித்து அருந்தியும் சுமார் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

அதற்குள் அவர்கள் மாயமான செய்தி தெரியவர மீட்பு குழுவினர் காட்டிற்குள் தேடி சென்ற நிலையில் 30 மணி நேரம் கழித்து அந்த இளைஞர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K