வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (17:04 IST)

வாட்ஸ் ஆப்பில் வந்த புதிய பிரச்சனை : ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் செய்திகளை மூன்றாவது நபரால் எளிதாக படிக்கவும், அதை வேறு மாதிரி திரித்து அனுப்பவும் முடியும் என்று உறுதியாகி இருப்பது வாட்ஸ் ஆப் பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
உலகில் செல்பொன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 150 கோடிக்கு மேல் ஆகும். இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்களை இடையில் மறித்து அவற்றைப் படித்து ஹேக்கர்களால் மாற்றவும் முடியும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.  உலகில் முக்கிய இணைய பாதுகாப்பு நிறுவனமான செக்பாயிண்ட் என்ற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
 
இதில் 3 வழிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. அதில் 1 ) குரூப் சாட்களில் quote  என்கிற ஆப்ஷன்களை பயன்படுத்தி தகவல் அனுப்புபவரின் அடையாளத்தை மாற்ற முடியும்.
 
இரண்டாவதாக ஒரு மெசேஜிக்கு ரிப்ளை செய்கையில்,  அதை இடைமறித்து அந்த மாற்ற முடியும். மூன்றாவது தனிப்பட்ட சாட்டில் இருப்பதை குரூப் சாட்டில் தெரியும்படி வைக்க முடியும்.  இதன்மூலம் பல விபரீதமாக விளைவுகள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் குரூப் சாட்களில் என்றில்லாது தனிப்பட்ட முறையில் செய்யப்படும், தகவல் பறிமாற்றத்தையும் எளிதாக மாற்றி போலி தகவல்களை பரப்ப முடியும் என்று செக் பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் நிலையில், அதன் மூலம்  பகிரப்படும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.