செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (08:55 IST)

தானாக ஆஃப் ஆகும் மைக்.. எதிர்கட்சிகள் அதிர்ச்சி! – நாடாளுமன்றத்தில் புதிய அப்டேட்!

New Parliament
புதிய நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் பேசும் நேரம் முடிந்ததும் மைக் தானாக ஆஃப் ஆகும் தொழில்நுட்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இன்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல சிறப்பு முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக நடந்த நாடாளுமன்ற கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றம் மற்றும் விவாதங்களின் போது எதிர்கட்சிகள் எம்.பிக்கள் தொடர்ந்து பல கோஷங்களை எழுப்பி வந்ததால் பலமுறை நாடாளுமன்ற அவைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிக்கல்களை தீர்க்கும் வகையில் தற்போது நாடாளுமன்றத்தில் தானியங்கி மைக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எம்பிக்கள் பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததும் இந்த மைக்குகள் தானாக ஆஃப் ஆகிவிடும் என கூறப்படுகிறது.

இதனால் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் கோஷம் எழுப்புதல் போன்றவற்றை எம்.பிக்கள் செய்ய முடியாது என்பதால் எதிர்கட்சிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K