1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 29 ஜனவரி 2025 (14:32 IST)

வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஏதாவது பலன் கிடைக்க வேண்டும்: விஜய் சேதுபதி..!

வருமான வரி செலுத்துவது அவசியம் என்றும் ஆனால் அதே நேரத்தில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஏதாவது பலன் கிடைக்க வேண்டும் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மதுரையில் வருமான வரித்துறையினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அரசு சார்ந்த சில விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு மற்றவர்களை கேட்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் குறிப்பாக பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? அவற்றில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றை எளிமையாக தெரிந்து கொள்வதற்கு அரசு இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது என்றும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் பான் கார்டு குறித்த விழிப்புணர்வு வீடியோ கார்ட்டூன் வடிவில் வெளியாகியுள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வருமான வரி செலுத்துவது அனைவரும் அவசியமாக கருத வேண்டும் என்றும் அதே நேரத்தில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு அரசின் மூலம் ஏதாவது பலன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran