செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (16:22 IST)

ரீல்ஸ் வீடியோவுக்காக சிறைக்கு சென்ற நபர்!

telunga
சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி ? என வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இனந்த மாநிலத்தைச்  சேர்ந்த அனுமன் நாயக் என்ற இளைஞர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்து அதைப் பதிவேற்றி வைரலாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி ? என வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரரலானதைத் தொடர்ந்து,  சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அளித்த புகாரின் பேடி அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.