செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 25 மே 2020 (19:32 IST)

பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களுக்கு உணவு கொடுப்பத்தற்காகச் சென்ற ஒரு இளைஞர் மனமிரங்கி அங்குள்ள பிச்சைக்காரியை மணந்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பீரில் லலித் பிரசாத் என்ற வியாபாரியிடம் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் அணில். கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தெருவோரங்களில்  உள்ள மக்களுக்கு உண்வு வழங்க லலித் முடி செய்தார்.

அதனால் தனது ஓட்டுநர் அனிலுடன் லலித் ஒரு குறிப்பிட்ட தெருவோர மக்களுக்கு உணவு பொட்டலங்கள் கொடுத்துக்  கொண்டிருந்தார்.

ஒரு பெண் தனது அன்னையுடன் வந்து உணவுப் பொட்டலங்கள் வாங்க வந்துள்ளார் .
அப்போது  அணிலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம் அணில் ஏன் இங்கு வந்து பிச்சை எடுக்கீர்கள் என விசாரித்தார். அதற்கு அப்பெண், தந்து தந்தை பக்கவாதத்தார் இறந்துவிட்டார். அண்ணன் என்னையும் அம்மாவையும் வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்டார். அதனால் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் விட்டுள்ளார்.

இதனால் மனம் இறங்கிய அணில் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தனது முதலாளி லலித்திடன் தெரிவித்தார். அவருன் சம்மதம் அளித்ததால் நேற்று அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.