புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:53 IST)

போலீஸாரை டீ வாங்கி வரச் சொன்ன போதை நபர் ! வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போதை நபர், அவசர உதவி எண்ணான 100க்கு அழைத்து, போலீஸாரை டீ வாங்கிவருமாறு கூறியுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மக்கள் எதவாது ஆபத்தில் மற்றும் அவசர உதவிக்காக போலீஸாரை அழைத்து தொடர்பு கொள்வதற்காக அனைத்து மாநிலங்களிலும் 100 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கவும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோடார் பகுதியில் வசிக்கும் சச்சின் என்பவர், அம்மாநில  போலீஸாரின் அவசர உதவி எண்ணான 100க்கு அழைத்து, வரச்சொல்லி உள்ளார்.
 
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், என்ன காரணம் என கேட்ட போது, தனக்கு மது வாங்கி வரச் சொல்வதற்க்காகவே அழைத்ததாகக் கூறியுள்ளார், அதைக் கேட்டு அதிர்ந்த போலீஸார், சச்சின் என்ற நபர் கூறுவதை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.