தொடர்புடைய செய்திகள்
- லயோலா கல்லூரி முன்னால் பேராசிரியர் கருத்துக்கணிப்பு: ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி?
- நடிகை கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதி விடுதலை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
- லட்சுமி மேனனின் ஸ்லிம் சிக்ரெட் என்ன தெரியுமா??
- பாஜகவுடன் இணைந்தால் அதிமுக ஊழலே செய்யாது; தமிழிசை
- இணைக்கப்படாத ஆதார் - பான் எண்: 59% மக்களின் நிலை??
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 21ஆம் தேதி பொதுவிடுமுறை
சென்னை ஆர்.கே நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் இயங்காது
இந்த நிலையில் ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடைபெறும் டிசம்பர் 21ஆம் தேதி தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறும் தனியார் நிறுவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டிசம்பர் 21ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால் அன்றைய தினம் விடுமுறை ஆகிவிடுவதால் வெள்ளி ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்தால் நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை கிடைக்கும் என பலர் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எனவே இதனால் ஓட்டுப்பதிவின் சதவீதம் பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
அடுத்த கட்டுரையில்
