1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (14:52 IST)

சடலங்களை விற்று வருவாய் ஈட்டிய அரசு! இத்தனை கோடியா? எங்கு தெரியுமா?

Death
கேரளம் மாநிலத்தில் சடலங்களை விற்றதன் மூலம் ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது அரசு.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு மக்களுக்கு மக்களுக்குத் தேவையான பலவேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், கேரளம் மாநிலத்தில் சடலங்களை விற்றதன் மூலம் ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது அரசு.
 
இம்மா நிலத்தில் மருத்துவமனை பிணவறைகளில் 2008 ஆம் ஆண்டு முதல் கேட்பாரற்று கிடந்த 1122 சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.3.66 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கத் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சடலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 
பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சடலம்  ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும் அரசு வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.