1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 மே 2023 (20:29 IST)

உறவை முறித்த பெண்தோழி - வாலிபர் எடுத்த விபரீத முடிவு

உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணமான நபர் ஒருவருக்கு திருமணமானது தெரிந்து பெண் தோழி உறவை முறித்துக் கொண்ட நிலையில், வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

உத்தபிரதேச மாநிலம் பல்லியா என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. ஆனால், வேறொரு பெண்ணுடன் அவர் உறவில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த  நபருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த அப்பெண், அவருடனான உறவை முறித்துக் கொண்டார்.

இதனால், மனமுடைந்த அந்த நபர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவ்விடத்தில் இருந்து பூச்சி மருந்து கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாலிபரின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்பெண் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார்  வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.