1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (19:44 IST)

விமானியின் தோழியை காக்பிட்டில் அமர வைத்த சம்பவம்....ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

Flight
விமான போக்குவரத்து இயக்குனகரம் ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி  துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்திய விமானம் கிளம்பியது. இந்த விமானத்தின் விமானி ஒருவர் தன் பெண் தோழியை விமான பைலட்டின் காக்பிட்டில் அமரவைத்துள்ளார்.

இதுபற்றி விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய விமானப் போக்குரவத்து இயக்குனரகம் (டி.ஜி.ஜி.ஏ) விசாரணை நடத்தியது.

அதில், அப்பெண் ஏர் இந்திய விமானத்தின் ஊழியர் என்றும், அவர் விமானதில் பயணியாகச் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

இந்த விசாரணையில்  உடனடியாக நடவடிக்கை எடுத்துள்லது,. அதன்படி, ஏர் இந்திய விமானத்திற்கு ரூ. 30 லட்சம் விமானம் அபராதம் விதித்துள்ளது.