ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (16:19 IST)

சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு..! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி.!!

Pondy Child
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிறுமியை கடத்தி கொலை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இதனிடையே சிறுமியின் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். இதை அடுத்து சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்
 
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதனிடையே படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.